அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம்
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Alor Setar Railway Station மலாய்: Stesen Keretapi Alor Setar); சீனம்: 亚罗士打火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் அலோர் ஸ்டார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் இந்த நிலையம் உள்ளது.[1] பொதுஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக அலோர் ஸ்டார் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. புதிய நவீன நிலையத்தைக் கட்டுவதற்கு வசதியாக, தனித்துவமான கடிகாரக் கோபுரத்துடன் கூடிய பழைய தொடருந்து நிலையம், 29 ஜனவரி 2013-இல் மூடப்பட்டது.[2] தற்காலிக நிலையம்பழைய நிலையத்திற்கு எதிரே ஒரு தற்காலிக நிலையம், தஞ்சோங் பெண்டகாரா சாலையில் கட்டப்பட்டது. அந்தத் தற்காலிக நிலையம், 12 ஜூன் 2014-இல் புதிய நிலையம் செயல்படத் தொடங்கும் வரை செயல்பாட்டில் இருந்தது.[3] பழைய நிலையம் பாதுகாக்கப்பட்டு வடுகிறது. தற்போது உணவகம் மற்றும் சிற்றுண்டி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.[4] இந்து ஆலயம்2020-ஆம் ஆண்டில், தொடருந்து நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான இந்து ஆலயம், சாலைத் திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில் இடிக்கப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பட்டர்வொர்த் நகரில் இருந்து வடக்கு எல்லைக்கு தொடருந்து வழித்தடங்களை அமைத்த இந்திய தொழிலாளர்களால் அந்த ஆலயம் கட்டப்பட்டது.[5] இந்த ஆலயம் 2011-இல் மலேசியத் திரைப்படமான ’ஓம்பாக் ரிண்டு’ (Ombak Rindu) எனும் திரைப்படத்தில் இடம்பெற்று உள்ளது.[6] மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia