தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்
தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Teluk Gadong Komuter Station; மலாய்: Stesen Komuter Teluk Gadong); சீனம்: 直落牙弄) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1] இந்த நிலையம் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி போன்ற பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2] பொது1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[3] தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும். தாமான் கெம்பீரா வளாகம்1995-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கட்டப்பட்ட பழைய கட்டிடத்திற்குப் பதிலாக, 2020-ஆம் ஆண்டில் தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தாமான் கெம்பீரா (Taman Gembira) எனும் குடியிருப்பு வளாகம் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது. மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia