சுபாங் ஜெயா நிலையம்
சுபாங் ஜெயா நிலையம் (ஆங்கிலம்: Subang Jaya Station; மலாய்: Stesen Subang Jaya); சீனம்: 梳邦再也) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். சுபாங் ஜெயா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் சுபாங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் (KTM Komuter Port Klang Line); கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் (KL Sentral-Terminal Skypark Line) மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் (LRT Kelana Jaya Line) ஆகியவற்றால் சேவை செய்யப்படுகிறது. பொதுஇந்த நிலையம் ஒரு பிரபலமான தொடருந்து மற்றும் பேருந்து மையமாகும். சுபாங் ஜெயா செகி கல்லூரி, டெய்லர் பல்கலைக்கழகம், மோனாஷ் பல்கலைக்கழகம்,இந்தி கல்லூரி, மலேசிய KDU பல்கலைக்கழகக் கல்லூரி, சன்வே பல்கலைக்கழகம் போன்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இந்த நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ட்ரலுக்குச் செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகும். அத்துடன் இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் வழித்தடம் இந்த நிலையத்தின் வழியாக, இதே நிலையத்தையும் கடந்து செல்கிறது. செத்தியா ஜெயா நிலையத்தில் நிற்காத இஸ்கைபார்க் வழித்தட தொடருந்துகள் (Skypark Link) இந்த நிலையத்தில்]] (Subang Jaya Station) நின்று செல்கின்றன.[2] கிளானா ஜெயா வழித்தடம்கிளானா ஜெயா வழித்தடம் அல்லது 'கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[3] இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.[4] இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[5][6] புத்ரா எல்ஆர்டிமுன்பு இந்த வழித்தடம் புத்ரா எல்ஆர்டி (PUTRA LRT) என அழைக்கப்பட்டது. இது ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக, பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்திற்கு அதன் முன்னாள் முனையமான கிளானா ஜெயா நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 5; வழித்தடத்தின் நிறம் சிகப்புக்கல் என பொறிக்கப்பட்டு உள்ளது. 15 பிப்ரவரி 1994-இல் கிளானா ஜெயா வழித்தடத்தின் கட்டுமானம் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரையிலான முழுப் பயணத்திற்கும் மொத்தம் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பிடிக்கும்; மற்றும் இந்தப் பயணம் 37 நிலையங்களை உள்ளடக்கியது.[3] மேலும் காண்கசுபாங் ஜெயா நிலையத்த்தின் அமைப்பைப் போன்ற மற்ற நிலையங்கள்:
சுபாங் ஜெயா நிலையத்த்தின் செயல்பாட்டைப் போன்ற மற்ற நிலையங்கள்:
காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia