கொடியாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kodiang Railway Stationமலாய்: Stesen Keretapi Kodiang); சீனம்: 柯江火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் கொடியாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கொடியாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), கொடியாங் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 2.) உள்ளது. கெடா மாநிலத்தின் சாங்லூன் நகரம் சற்று அருகில் உள்ளது.
பொது
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடியாங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]
மலேசியா-தாய்லாந்து எல்லை
இந்த நிலையம் கொடியாங் நகரத்தில் இருந்து 3.4 கி.மீ. தொலைவில் உள்ளது. பெர்லிஸ்-கெடா மாநில எல்லைகள் வெகு தொலைவில் இல்லை. இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்து சேவையை மட்டும் வழங்குகிறது.