தைப்பிங் தொடருந்து நிலையம்
தைப்பிங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Taiping Railway Station மலாய்: Stesen Keretapi Taiping); சீனம்: 太平火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம், தைப்பிங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் தைப்பிங் நகரத்திற்கும்; மற்றும் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1] மலேசியாவின் முதல் தொடருந்து நிலையமான தைப்பிங் நிலையம், 1885-ஆம் ஆண்டில், மலேசியாவின் முதல் தொடருந்து வழித்தடமான தைப்பிங்-போர்ட் வெல்ட் வழித்தடத்தில் (Taiping-Port Weld Railway Line) திறக்கப்பட்டது. ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், தற்போதைய நவீன நிலையம் தைப்பிங்கில் கட்டப்பட்ட மூன்றாவது தொடருந்து நிலையம் ஆகும்.[2] பொதுதைப்பிங் நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் இல் உள்ளது. தைப்பிங் நிலையம் கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் சேவைகள் இரண்டிற்கும் ஒரு நிறுத்தமாகும். இந்த இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே உள்ளன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. புக்கிட் மெர்தாஜாம்-பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும் 1 கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி வழித்தடம் 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது. வரலாறுமுதல் தைப்பிங் நிலையம் 1885-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இப்போது கிங் எட்வர்ட் VII பள்ளி இருக்கும் இடத்தில் அந்த நிலையம் அமைந்து இருந்தது. இந்த நிலையத்தை இயூ லோ திறந்து வைத்தார்.[3] இந்த தைப்பிங் நிலையம் தைப்பிங்-போர்ட் வெல்ட் தொடருந்து வழித்தடத்தின் கிழக்கு முனையமாக இருந்தது; இந்த வழித்தடம்தான் மலேசியாவின் முதல் தொடருந்து வழித்தடம் ஆகும். இந்தத் தடம் 1980-களில் அகற்றப்பட்டு விட்டன. இப்போது இல்லை. முதல் தைப்பிங் தொடருந்து நிலையம்முதல் தைப்பிங் தொடருந்து நிலையத்திற்குப் பதிலாகக் கட்டப்பட்ட இரண்டாவது நிலையம், 1890-கள் முதல் 1900-களின் முற்பகுதி வரை ஜாலான் இசுடேசன் சாலையில் இயங்கி வந்தது. இந்த நிலையம் இப்போதைய புதிய நிலையமாக மாற்றப்படும் வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. பழைய நிலையம் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது நிலையத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள புதிய நிலையம், 27 பிப்ரவரி 2014 அன்று செயல்படத் தொடங்கியது.[4] மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பேராக் மாநிலத்தின் தைப்பிங் நகரில் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் வடக்கில் பாகன் செராய் நிலையத்திற்கும்; தெற்கில் பாடாங் ரெங்காஸ் நிலையத்திற்கும் இடையில் உள்ளது.[5] தைப்பிங் நகரம்தைப்பிங் (Taiping) நகரம், பேராக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாக அறியப்படும் இந்த நகரில் அழகிய பூங்காக்கள், அழகான குளங்கள் சூழ்ந்துள்ளன. ஓய்வு எடுப்பதற்கு மலேசியாவிலேயே மிகச் சிறந்த இடம் என்று மலேசிய மக்கள் கருதுகின்றனர். வருடம் முழுமையும் மழை பெய்வதால் எப்போதும் இங்கு குளிர்ச்சியாகவே இருக்கும். அமைதியான நகரம்ஈப்போ மாநகருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகருக்கும் நடுமையத்தில் தைப்பிங் இருப்பதால் பொதுப் போக்குவரத்துப் பிரச்னைகளும் குறைவு. ஈப்போ மாநகரத்தில் இருந்து வடக்கே 72 கி.மீ. தொலைவில் இருக்கிறது. 1938-இல் ஈப்போ நகரம் மாநிலத் தலைநகரமாக மாறியதும் தைப்பிங் இரண்டாம் நிலையை அடைந்தது. மலேசியர்கள் பலர் பணி ஓய்வு பெற்றதும் தைப்பிங் நகருக்குப் புலம் பெயர்கின்றனர். அங்கே வீடுகளை வாங்கித் தங்களின் ஓய்வு காலத்தைக் கழிக்க விரும்புகின்றனர். உணவுப் பொருட்களின் விலை இங்கு சற்றுக் குறைவாக இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia