செர்டாங் தொடருந்து நிலையம் அல்லது செர்டாங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Serdang Railway Station அல்லது Serdang Komuter Station; மலாய்: Stesen Keretapi Serdang அல்லது Stesen Komuter Serdang) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் செரி கெம்பாங்கான் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது.
[1][2]
இந்த நிலையம் பெசுராயா விரைவுச்சாலை (Besraya Expressway)
சுங்கை பீசி விரைவுச்சாலை (Sungai Besi Expressway); ஆகிய விரைவுச்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
பொது
இந்த நிலையத்திற்கு மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ள புத்ராஜெயா வழித்தடத்தின் (MRT Putrajaya Line) PY33செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையமும் இந்த நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள் இந்த செர்டாங் தொடருந்து நிலையத்தில் நிற்பது இல்லை.[3]
சிரம்பான் வழித்தடம்
சிரம்பான் வழித்தடம் அல்லது சிரம்பான் தொடருந்து வழித்தடம் (Seremban Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.
ரவாங் தம்பின் இணைப்பு
இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.
15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர்ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.