கோலா குபு பாரு தொடருந்து நிலையம்
கோலா குபு பாரு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Kubu Bharu Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Kubu Bharu); சீனம்: 新古毛火车站) என்பது மலேசியா, பேராக், உலு சிலாங்கூர் மாவட்டம், கோலா குபு பாரு நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோலா குபு பாரு நகரத்திற்கும், அம்பாங் பெச்சா புறநகர்ப் பகுதிக்கும் மற்றும் கோலா குபு பாரு நகரத்திற்கு அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2008 சனவரி 5-ஆம் தேதி, கோலா குபு பாரு நகருக்கான புதிய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது. பொதுஇந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் கோலா குபு பாரு நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது. கோலா குபு பாரு நிலையத்தின் ஒரு முனையில் சரக்கு முற்றம் உள்ளது. இது ரவாங்-ஈப்போ மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடத் திட்டத்திற்கு (Rawang-Ipoh Electrified Double Tracking Project) முன்னதாக உருவாக்கப்பட்டது. அமைவிடம்பேராக், முவாலிம் மாவட்டத்தில் கோலா குபு பாரு நகரின் மையப் பகுதியில் இருந்து 2.5 கி.மீ. அப்பால் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை வழியாகவும், மலேசியக் கூட்டரசு சாலை 1-இன் வழியாகவும் அணுகலாம். கோலா குபு பாரு - கிள்ளான் துறைமுக தொடருந்து நிலையத்திற்கான நேரடி சேவைகள் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டன. சிலாங்கூர் தொடருந்து சேவை1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது. சிலாங்கூர் இரயில்வே எனும் சிலாங்கூர் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ரவாங் நகரில் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கோலா குபு பாரு நகரிலும் அமைக்கப்பட்டன.[1] ரவாங் - ஈப்போ இரட்டை வழித்தடம்ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் சிலிம் ரிவர் நிலையம் உள்ளது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையின் நீளம் 179 km (111 mi). இந்தப் பாதை முக்கியமான மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மற்றும் ஈப்போ நகரங்களுக்கு இடையே அதிகபட்ச 160 km/h (99 mph) வேகத்தில் தொடருந்துகளை இயக்குகிறது. இந்தத் திட்டம் 2008-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் மின்சார தொடருந்து சேவைகள் 2010-இல் தொடங்கப்பட்டன.[2] கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவைகேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது.[3] பழைய கோலா குபு பாரு நிலையம்மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia