திரோய் கொமுட்டர் நிலையம்
திரோய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Tiroi Komuter Station; மலாய்: Stesen Komuter Tiroi) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், திரோய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். லாபு சாலையின் 7-ஆவது கிலோமீட்டரில், தாமான் திரோய் எனும் ஒரு சிறிய வீடமைப்பு பகுதிக்கு அடுத்ததாக இந்த நிலையம் அமைந்துள்ளது. முன்பு இந்த நிலையம் திரோய் தொடருந்து நிலையம் (Tiroi Railway Station) என்று அழைக்கப்பட்டது. 1948-1960 மலாயா அவசரகாலத்தின் போது மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களால் அழிக்கப்பட்ட பழைய நிலையத்திற்குப் பதிலாக புதிய நிலையம் கட்டப்பட்டது. அதே நிலையம் 1995-ஆம் ஆண்டில் செப்பனிடப்பட்டது.[1] பொதுதிரோய் நகரப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், திரோய் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. சிரம்பான் வழித்தடம் என்றும்; காஜாங் வழித்தடம் என்றும் அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடத்தில் இந்த நிலையம் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.[2] மிகக் குறைவான பயணிகளுக்கு சேவை செய்யும் பல கொமுட்டர் நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். இருப்பினும், அண்மைய காலங்களில், திரோய் நகர்ப்பகுதிக்கு அருகில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருவதால், இந்த நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.[2] வழித்தடங்கள்இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகள்; 2 வழித்தடங்கள் உள்ளன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன.[3] திரோய் நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திற்கு கேடிஎம் கொமுட்டர் மூலமாகச் செல்வதற்கு ஒரு மணி நேரம் 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும்.[4] மேலும் காண்க
திரோய் நிலையக் காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia