ராசா, சிலாங்கூர்
ராசா, (மலாய்: Bandar Rasa; ஆங்கிலம்: Rasa; சீனம்: 拉萨); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) உள்ள ஒரு சிறு நகரம்; ஒரு முக்கிம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 53 கி.மீ.; ரவாங்கில் இருந்து 26 கி.மீ. வடக்கே உள்ளது.[2] ஏறக்குறைய 130 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நகரம் ஓர் அமைதியான; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத நகரம் ஆகும். இருப்பினும் 1900-ஆம் ஆண்டுகளில் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்கியது என்பது குறிப்பிடத் தக்கதாகும். சிலாங்கூர் ஆறு இந்த நகரைக் கடந்து செல்கிறது.[3] சீனர்கள் மிகுதியாக வாழும் இந்த நகரம், 1900-ஆம் ஆண்டுகளில் ஈய உற்பத்திக்குப் புகழ்பெற்று விளங்கியது. ஈயச் சுரங்கத்தொழில் முடிவிற்கு வந்ததும் பெரும்பாலோர் வெளியூர்களுக்கு மாறிச் சென்றுவிட்டனர். இப்போதைக்கு வயதானவர்கள் மட்டுமே வாழ்கின்றனர். வரலாறுராசா நகரத்தின் தொடக்கத்தில், சுரங்கத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த பெரும்பாலான சீனக் குடியேற்றவாசிகள்; சீனா குவாங்டொங் (Guangdong) மாநிலத்தைச் சேர்ந்த ஊய் சோ (Hui Zhou) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். முதன்முதலாக 20 குடும்பங்கள் சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து உள்ளனர்.[4] 1900-ஆம் ஆண்டுகளில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் ராசா, கோலா குபு பாரு (Kuala Kubu Baru) மற்றும் செரண்டா (Serendah) ஆகிய நகரங்கள், ஈய உற்பத்தியில் முக்கிய மையங்களாக விளங்கின. 1900-ஆம் ஆண்டுக்குள் ராசா ஒரு கலகலப்பான மற்றும் வளமான நகரமாக மாறியது. மக்கள் தொகை 4000 வரை உயர்ந்தது. ஈயச் சுரங்க முதலாளிகள்ராசா நகரம் அதன் உச்சத்தில், அங்கு 20-க்கும் மேற்பட்ட திறந்த வெளி ஈயச் சுரங்கங்கள் (Open Cast Mines) இருந்தன; மற்றும் 5 ஈயவாரி கப்பல்களும் (Dredges) செயல்பாடுகளில் இருந்தன. டான் பூன் சியா (Tan Boon Chia), லோகே இயூ (Loke Yew) மற்றும் சீ எங் வா (Cheah Eng Wah) ஆகியவர்கள் அந்தக் காலக் கட்டத்தில் பிரபலமான ஈயச் சுரங்க முதலாளிகளாக இருந்தனர்.[4] அனைத்து ஈயச் சுரங்க முதலாளிகளிலும், டான் பூன் சியா மிகவும் செல்வாக்கு மிக்க ஈயச் சுரங்க முதலாளி ஆகும். டான் பூன் சியா அப்போது ராசாவில் கட்டிய மாளிகை (Tan Boon Chia Mansion Bungalow) அந்த நேரத்தில் ராசாவின் அடையாளமாக மாறியது. இந்த மாளிகை 1918-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இன்றும் இந்த மாளிகை ராசாவின் அடையாளைச் சின்னமாக விளங்குகிறது. ராசா புதுக்கிராமம்ராசா புதுக்கிராமம் (Kampung Baru Rasa) 1949-இல் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ராசா மலாயா பொதுவுடைமை கட்சியின் (Communist Party of Malaya) நிர்வாக மையமாக மாறியது.[5] மலாயா அவசர காலத்தில், பிரித்தானிய காலனித்துவவாதிகள் ராசாவைச் சுற்றியிருந்த வீடுகளை எரித்து, அங்கு இருந்த குடியிருப்பாளர்களைக் கட்டாயப்படுத்தி இடம் பெயர்ச் செய்தனர்.[5] வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைராசா புதுக்கிராமம் நிறுவப்பட்டபோது, 1000 மக்களைக் கொண்டிருந்தது. 1954-இல் 1120 ஆகவும், 1970-இல் 5080 ஆகவும் அதிகரித்தது. இருப்பினும், மக்கள் தொகை 1980-இல் 4843 ஆகவும் 1995-இல் 2860 ஆகவும் குறைந்தது. 1990-இல் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை பெயர் மாற்றம்அதே ஆண்டில் கம்போங் பாரு ராசாவின் பெயர் கம்போங் சுவாங் (Kampung Chuang). என மாற்றப்பட்டது. ஆனாலும் உள்ளூர்வாசிகளுக்கு கம்போங் பாரு ராசா (Kampung Baru Rasa) என்ற பெயர்தான் பரிச்சயமாகி விட்டது. இன்றைய நிலையில், கோலாலம்பூர் நகரைச் சுற்றியுள்ள மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது ராசா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. காட்சியம்மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia