டெங்கில்
டெங்கில் (மலாய் மொழி: Dengkil; ஆங்கிலம்: Dengkil; சீனம்: 龙溪) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிம்; ஒரு நகரம். புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயாவிற்கு அருகில், கோலாலம்பூரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] மலேசிய பல்லூடகப் பெருவழி; மற்றும் புத்ராஜெயா வளாகங்களுக்கு அருகில் உள்ளதால் அண்மைய காலங்களில் அபிரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்த நகரத்திற்கு தெற்கில் சாலாக் திங்கி புது நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது.[2] பொதுசிலாங்கூர் மாநிலத்தில், டெங்கில் பெரிய முக்கிம் ஆகும். இந்த நகரம் பத்து மலாய்க் கிராமங்கள்; ஒரு சீனர் புதிய கிராமம்; ஓர் இந்தியர் சமூகக் கிராமம் மற்றும் 82 பொது வீட்டு மனைத் திட்டங்களை உள்ளடக்கியது.[2] வரலாறு19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஈயச் சுரங்கத் தொழிலுக்கு பேர் பெற்ற இடமாக விளங்கியது. மலாயாவின் பல பகுதிகளில் இருந்து சீன மக்கள் இங்கு வந்தனர். அதே போல பல ரப்பர் தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டதால் கணிசமான அளவிற்குத் தமிழர்களும் குடிபெயர்ந்தனர். 1950-களில், டெங்கில் புறநகர்ப் பகுதியில் உள்ள சீனர்கள் மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்காக, பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம், ஒரு புதிய கிராமத்தை நிறுவியது. அதன் பெயர் டெங்கில் புதிய கிராமம் (Dengkil New Village}.[1] கம்போங் பாரு டெங்கில்இப்போது இந்தக் கிராமம் கம்போங் பாரு ஸ்ரீ டெங்கில் (Kampung Baru Seri Dengkil) என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இந்தக் கிராமம் பல சிறு கிராமங்களாக விரிவடைந்தது. அவை படிப்படியாக பல சீனக் கிராமங்களாக மாறின. டெங்கில் முன்பு ஒரு சீன கிராமமாகும். அதனால் அங்கு இன்னும் சீனத் தெரு அடையாளங்கள் உள்ளன.[3] டெங்கில் தமிழ்ப்பள்ளிகள்சிப்பாங் மாவட்டத்தின் டெங்கில் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 452 மாணவர்கள் பயில்கிறார்கள். 52 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட 2020-ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள்.[4]
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia