தெலுக் டத்தோ
தெலுக் டத்தோ (மலாய்: Teluk Datok; ஆங்கிலம்: Teluk Datok; சீனம்: 直落拿督) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு நகரம். அதே வேளையில் கோலா லங்காட் மாவட்டத்தின் ஊராட்சி நிர்வாக மையமாகவும் (Kuala Langat Municipal Council) விளங்குகிறது.[2] இதன் அருகாமையில் உள்ள நகரம் பந்திங் (Banting). லங்காட் ஆற்றின் இலாட அமைப்பு வளைவுக்குள் (Oxbow Meander) அமைந்துள்ளது. லங்காட் ஆறு (Sungai Langat) இந்த நகரின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளைச் சுற்றி வருகிறது.[3] மேற்குப் பகுதியில் லங்காட் ஆற்றின் குறுக்கே பந்திங் நகரின் முக்கிய பகுதி உள்ளது. பந்திங் பாலம் (Jambatan Banting) எனும் ஒரு பெரிய பாலம், தெலுக் டத்தோ நகரையும் பந்திங் நகரையும் இணைக்கிறது.[3] பொதுபந்திங் நகரம் தெலுக் டத்தோ நகரத்திற்கு மிக அருகாமையில் அமைந்து உள்ள ஒரு நகரம். பந்திங் சுற்றுப் புறங்களில் மலைகள், காடுகள் மற்றும் வேளாண்மைப் பண்ணைகள் உள்ளன. சிலாங்கூரின் முன்னாள் அரச நகரமான ஜுக்ரா, பந்திங் நகரத்திற்கு அருகில்தான் அமைந்து உள்ளது. இந்த இரு நகரங்களுக்கு மிக அருகில் மோரிப் கடற்கரைகள் உள்ளன.[4] 1950-ஆம் ஆண்டுகளில் தெலுக் டத்தோ சுற்று வட்டாரங்களில் நிறைய ரப்பர் தோட்டங்கள்; தென்னை தோட்டங்கள்; காபி தோட்டங்கள்; இருந்தன. அவற்றுள் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். அதன் காரணமாக இங்கு ஒரு தமிழ்ப்பள்ளியும் அமைக்கப்பட்டது. வரலாறு1882-ஆம் ஆண்டில் பந்திங், தெலுக் டத்தோ பகுதியில் பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. முதலில் அது ஒரு வாழைத் தோட்டம். பின்னர் ஆமணக்கு (Castor) தோட்டம்; அதன் பின்னர் காபி பயிர்த் தோட்டம். அதற்கு அடுத்து தென்னைத் தோட்டமாக மாறியது. இந்தத் தோட்டத்திற்குத் தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள். இந்தத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தமிழர்கள் சொந்தமாகவே தங்களின் வீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களின் வீடுகள் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவி இருந்தன.[5] தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளிபந்திங் சுற்றுவட்டாரத்தில் இயங்கிய தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி; பந்திங் தோட்டத் தமிழ்ப்பள்ளி; கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளி; சுங்கை சீடு தோட்டத் தமிழ்ப்பள்ளி; மற்றும் பந்திங் பட்டணத் தமிழ்ப்பள்ளி ஆகிய ஐந்து தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைத்து கூட்டுத் தமிழ்ப்பள்ளியாக 1986-ஆம் ஆண்டு தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி இயங்கத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை என சிறிய பள்ளியாக இருந்தது. பின்னர் 1990-ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம்; சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. மூன்று மாடி கட்டிடம்1991-ஆம் ஆண்டு முன்னாள் மலேசிய பொதுப் பணி அமைச்சர் துன் சாமிவேலு அவர்களின் ஆதரவுடன் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப் பட்டன. மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்ததால் மலேசிய பொதுப் பணி அமைச்சு மூன்று மாடி கட்டிடம் ஒன்றை நிறுவியது. தற்சமயம் 18 வகுப்பறைகள், மூன்று பாலர் பள்ளி, கணினி அறை, அறிவியல் கூடம், வாழ்வியல் பட்டறை, நல்லுரை வழிக்காட்டி பிரிவு அறை, நூல்நிலையம், குறை நீக்கல் அறை, பெரிய சிற்றுண்டிச் சாலை, திடல் போன்ற போதுமான வசதிகளுடன் சிறந்த தமிழ்ப்பள்ளியாகத் திகழ்கிறது.[6] தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியில் 472 மாணவர்கள் பயில்கிறார்கள்; 39 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள். [7]
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia