கோத்தா டாமன்சாரா
கோத்தா டாமன்சாரா (மலாய்: Kota Damansara; ஆங்கிலம்: Kota Damansara); சீனம்: 哥打白沙罗) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 4,000 ஏக்கர் (16.2 ச.கி.மீ) பரப்பளவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி ஆகும். அத்துடன் சுபாங் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பெருநகரங்களுக்கு இடையே உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.[1] பொதுசுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Sultan Abdul Aziz Shah Airport) மற்றும் மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (Rubber Research Institute of Malaysia) ஆகியவை இந்த நகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்கள். கோத்தா டாமன்சாரா நகர்ப்பகுதி, சுங்கை பூலோ மக்களவை தொகுதியின் (Sungai Buloh Parliamentary Constituency) கீழ் வருகிறது. கோத்தா டாமன்சாரா; பெட்டாலிங் ஜெயா உத்தாரா 5 (Seksyen PJU 5) (Petaling Jaya Utara 5) என்றும் அறியப்படுகிறது. மலேசியப் பொதுத் தேர்தல், 2022 தேர்தலில், சுங்கை பூலோ மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். வரலாறுகோத்தா டாமன்சாரா நிறுவப்படுவதற்கு முன்பு, இந்த நகர்ப்புற பகுதி சுங்கை பூலோ வன காப்பகத்தின் (Sungai Buloh Forest Reserve) ஒரு பகுதியாக இருந்தது. சுங்கை பூலோ வனக் காப்பகம் 1898-இல் மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது; மற்றும் இது மலேசியாவின் மிகப் பழமையான வனக் காப்பகமாகும்.[2] 1992-ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்திற்கு (Selangor State Development Corporation) (PKNS); சுங்கை பூலோ வன காப்பகத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டு; ஒரு புதிய நகரப் பகுதியை உருவாக்க உரிமை வழங்கப்பட்டது.[3] சுங்கை பூலோ நகர மையம்இந்த நகரத்தின் தொடக்கப் பெயர் சுங்கை பூலோ நகர மையம் (Sungai Buloh Town Center). கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதியின் விரைவான வளர்ச்சியின் காரணமாக 1999-இல் கோத்தா டாமன்சாரா என்ற பெயர் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது. [4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia