சுங்கை பீலேக்
சுங்கை பீலேக் (மலாய் மொழி: Sungai Pelek; ஆங்கிலம்: Sungai Pelek; சீனம்: 双溪比力) என்பது மலேசியா, சிலாங்கூர்,சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 30 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நகரம் பாகன் லாலாங் (Bagan Lalang) கடற்கரைக்கு அருகில் அமைந்து இருப்பதால், சிப்பாங் தங்கக் கடற்கரை நகரம் (Golden Coast Sepang) என்றும் பெயர் பெற்றுள்ளது. பொதுஇந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருந்து சுங்கை சிப்பாங் (Sungai Sepang) எனும் சிப்பாங் ஆற்றினால் பிரிக்கப் படுகிறது. உண்மையில் சுங்கை சிப்பாங் ஓர் ஆறு அல்ல; அது கடல் பெருக்கினால் 15 கி.மீ. தூரத்திற்கு பெருநிலப் பகுதிக்குள் செல்லும் கால்வாய்கள் அமைப்பு ஆகும்.[1] இந்த நகரத்தைச் சுற்றிலும் ஏராளமான சதுப்புநிலக் காடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வண்டல் மண்ணால் உருவான நிலப் படுகைகள். அத்துடன் உள்ளூரில் கிடைக்கும் களிமண் கொண்டு செங்கல் தயாரிக்கும் தொழிலுக்கும் இந்த நகரம் பிரபலம் பெற்றது. இருப்பினும் அண்மைய காலங்களில் செங்கல் தொழிற்சாலைகள் மிகவும் குறைந்துவிட்டன.[2] குடியிருப்புகள்இந்தச் சிறு நகரத்திற்கு அருகில் புக்கிட் பாங்கோங் (Bukit Bangkong), பத்து அம்பாட் (Batu Empat), பத்து டுவா (Batu Dua), தெலுக் மெர்பாவ் (Teluk Merbau) மற்றும் சிப்பாங் கெச்சில் (Sepang Kecil) போன்ற குடியிருப்புகள் உள்ளன. இவற்றுள் புக்கிட் பாங்கோங் முன்பு ஒரு சிறிய பழங்குடியினக் குடியேற்றமாக இருந்தது. ஆனால் தற்போது ஜாவானியர்கள் மலாய் மக்கள் (Javanese Malay) அதிகமாக உள்ளனர். இந்த நகரில் இரு இந்து ஆலயங்கள் உள்ளன. தாமான் ஸ்ரீ சுங்கை பீலேக்கில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஸ்ரீ விநாயகர் கோயில் உள்ளது. தாமான் செந்தோசாவில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் உள்ளது. தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளிசுங்கை பீலேக் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 322 மாணவர்கள் பயில்கிறார்கள்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia