பாண்டான் மக்களவைத் தொகுதி
பாண்டான் (மலாய்: Pandan; ஆங்கிலம்: Pandan; சீனம்: 香兰); என்பது மலேசியா, சிலாங்கூர் உலு லங்காட் மாவட்டதில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி (P100) ஆகும். இந்தத் தொகுதி 2002-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) பிரதிநிதித்துவம் படுத்தப் படுகிறது.[1] பொது2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பி.கே.ஆர்.யின் சார்பில் ராபிஸி ராம்லி (Mohd Rafizi Ramli) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022- ஆம் ஆண்டு அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் பொருளாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திராங்கானு மாநிலத்தின் பெசுட் நகர்ப் பகுதியில் பிறந்தவர். கிழக்கு கடற்கரை நகரமான கெமாமான் பகுதியில் வளர்ந்தவர். இவர் ஓர் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்; இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழில் செய்தவர். பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் பரப்பளவு 20 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 148,730 வாக்காளர்கள் உள்ளனர். பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்
மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்![]()
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia