சாலாக் திங்கி
சாலாக் திங்கி (மலாய் மொழி: Salak Tinggi; ஆங்கிலம்: Salak Tinggi; சீனம்: 沙拉丁宜) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 53 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது. வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், சாலாக் திங்கி நகரத்தை ‘வானூர்தி நிலைய நகரம்’ (Airport City) என்றும் அழைப்பதும் உண்டு.[1] பொதுஇந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சிப்பாங் மாவட்டத்தின் நிர்வாக மையம் இந்த நகரில்தான் அமைக்கப்பட்டு உள்ளது.[2] 1970-ஆம் ஆண்டுகளில் சாலாக் திங்கி நகரம் ஓர் ஒதுக்குப் புறமான கிராமமாக இருந்தது. நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அது ஒரு காட்டுப் பகுதியில் இருந்ததால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. பண்டார் பாரு சாலாக் திங்கி1990-களில், புத்ராஜெயா; சைபர்ஜெயா; மலேசிய பல்லூடகப் பெருவழி; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற நவீனத் தளங்கள் உருவானதும் சாலாக் திங்கி நகரம் மிகவும் பிரபலமானது. இப்போது பண்டார் பாரு சாலாக் திங்கி (Bandar Baru Salak Tinggi) என்று அழைக்கப் படுகிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் பணிபுரிபவர்கள் பலர் இந்த நகரில் தங்கி உள்ளனர். மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia