சுங்கை பெசார்
சுங்கை பெசார் (மலாய்: Sungai Besar; ஆங்கிலம்: Sungai Besar; சீனம்: 大港) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது. இந்த நகரம் செகிஞ்சான்; சபாக் பெர்ணம் ஆகிய நகரங்களுக்கு இடையில் உள்ளது. இதுவே சபாக் பெர்ணம் மாவட்டத்தில் பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது. பொதுசுங்கை பெசாரின் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள்; சிறு நடுத்தர தொழில்துறையினர்; மற்றும் மீனவர்கள். தென்னை உற்பத்தி, செம்பனை உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். நெல் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. சபாக் பெர்ணம் மாவட்டத்தின் ஊராட்சி நிர்வாகத்தின் (Majlis Daerah Sabak Bernam) மையமாக சுங்கை பெசார் விளங்குகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மன்ற அலுவலகம் ஆகியவை சுங்கை பெசார் நகரில் அமைந்து உள்ளன. துரித வளர்ச்சிமீன்பிடி கிராமமாக இருந்த சுங்கை பெசார், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வருகிறது. சிறு நடுத்தர தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு நோக்கங்களுக்காக; சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 9 பகுதிகளில் சுங்கை பெசார் ஒன்றாகும்.[1][2] சபாக் பெர்ணம் மாவட்டம்சிலாங்கூர் மாநிலத்தின் நெல் விளையும் கேந்திரப் பகுதியாக சபாக் பெர்ணம் மாவட்டம் அறியப்படுகிறது. சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை வேளாண்மை. இந்த மாவட்டம் சிலாங்கூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை உள்ளன. சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: சபாக்; சுங்கை பெசார்; செகிஞ்சான். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் சபாக் பெர்ணம் நகரம்; பெரிய நகரம் சுங்கை பெசார். மேற்கோள்கள்மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia