சீசியம் ஓராக்சைடு
சீசியம் ஓராக்சைடு (Caesium monoxide) என்பது Cs2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் இருமை ஆக்சைடுகள் :Cs11O3, Cs4O, Cs7O, மற்றும் Cs2O. இருப்பதாக அறியப்படுகின்றன.[3]. சீசியம் ஆக்சைடு மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற அறுகோணப் படிகங்களாகக் காணப்படுகிறது.ஆக்சைடுகள் மற்றும் கீழாக்சைடுகள் இரண்டும் அட்ர் வண்ணங்களில் காணப்படுகின்றன[1]. ஒளி மின்னோடுகளில் பிம்ப அடர்விகள், வெற்றிட ஒளி இருவாய்கள், ஒளி பெருக்கிகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபடக்கருவி குழல்கள் போன்ற கருவிகளில் ஒளி மின்னோடாக அகச்சிவப்பு கதிர் சுட்டுக்குறிகளை கண்டறிய சீசியம் ஆக்சைடு பயன்படுகிறது[4]. வெள்ளிப் படலத்தின் மீதுள்ள சீசியம் ஆக்சைடு படலத்தின் மீதுள்ள சீசியம் படலம், 1929 – 1930 ஆம் ஆண்டுகளில் முதல் நவீன ஒளியுமிழ் மேற்பரப்பாகப் பயன்பட்டது என்று எல்.ஆர் கொல்லர் தெரிவிக்கிறார்.[5] இது நல்லதொரு எலக்ட்ரான் உமிழ்வியாக செயற்படுகிறது என்றாலும் இதனுடைய அதிக ஆவியழுத்தம் இதனுடைய பயன்பாட்டைக் குறைக்கிறது.[6] வினைகள்தனிம நிலை மக்னீசியம், சீசியம் ஆக்சைடை சீசியம் உலோகமாக குறைக்கிறது. மக்னீசியம் ஆக்சைடு உடன் விளை பொருளாக கிடைக்கிறது:[7][8]
நீருறிஞ்சும் தன்மையுள்ள சீசியம் ஆக்சைடு அரிப்புத்தன்மையுள்ள சீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia