சோடியம் சாலிசிலேட்டு(Sodium salicylate) என்பது C7H5NaO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். சாலிசிலிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் சாலிசிலேட்டு என அழைக்கப்படுகிறது. உயர்வெப்பம் மற்றும் அழுத்த நிபந்தனைகளில் சோடியம் பினாலேட்டுடன் கார்பன் டை ஆக்சைடு வினைபுரிவதால் சோடியம் சாலிசிலேட்டு உற்பத்தியாகிறது. முற்காலத்தில் குளிர்கால பசுமைமாறா தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மெத்தில் சாலிசிலேட்டை நீராற்பகுப்பு செய்து சோடியம் சாலிசிலேட்டு தயாரித்தார்கள். இனிப்புப் பூச்சமரப் பட்டையுடன் மிகையளவு சோடியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்தியும் தயாரித்தார்கள் [4].
பண்புகள்
சோடியம் சாலிசிலேட்டு ஒரு சாலிசிலேட்டு குடும்ப வகைச் சேர்மமாகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடத்தில் இராய் கூட்டறிகுறியை தூண்டுகின்றது. பொதுவாக இந்நோய் கூட்டறிநோய்குறி இன்ஃபுளுவென்சாசின்னம்மை போன்ற தீநுண்ம நோய்களைத் தொடர்ந்து வைரசு தொற்றாக வருகிறது.
பயன்கள்
வலிநிவாரணியாகவும் காய்ச்சலடிக்கியாகவும் சோடியம் சாலிசிலேட்டு ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். புற்றுநோய் செல்களில் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பையும் [5][6][7]இழைய நசிவு[8] நடவடிக்கையையும் தூண்டுகிறது. ஆசுப்பிரின் மருந்து ஒவ்வாமை கொண்டவர்களுக்கு மாற்றாக இம்மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். வெற்றிட புற ஊதாக் கதிர்விச்சையும் எலக்ட்ரான்களையும் கண்டறிய ஒளிரும்பொருளாக சோடியம் சாலிசிலேட்டு பயன்படுத்தப்படுகிறது [9].