சோடியம் சயனோபோரோ ஐதரைடு
சோடியம் சயனோபோரோ ஐதரைடு (Sodium cyanoborohydride) என்பது NaBH3CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஓர் உப்பு என்றாலும் வர்த்தக மாதிரிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பரவலாக கரிமத் தொகுப்பு வினைகளில் இமீன்களை ஒடுக்குவதற்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. நீரிய நிபந்தனைகளிலும் கூட இவ்வுப்பு நிலைத்து நிற்கிறது [2]. பயன்கள்எலக்ட்ரானை-திரும்பப் பெறும் சயனைடு பதிலீடான [B(CN)H3]− அயனியைக் கொண்டிருப்பதால் சோடியம் போரோ ஐதரைடில் இடம்பெற்றுள்ள [BH4]− – அயனியைக் காட்டிலும் குறைவான ஒடுக்கும் பண்பை வெளிப்படுத்துகிறது[3]. ஓர் இலேசான ஒடுக்கும் முகவர் என்பதால் குறிப்பாக இமீன்களை அமீன்களாக மாற்ற இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், குறிப்பாக ஒடுக்க அமைனாக்கல் வினைகளுக்கு சோடியம் சயனோபோரோ ஐதரைடு சாதகமாகச் செயல்படுகிறது. இங்கு வினையாக்கி சோடியம் சயனோபோரோ ஐதரைடு முன்னிலையில் ஓர் ஆல்டிகைடு அல்லது கீட்டோன் ஓர் அமீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. குறிப்பாக இவ்வினையில் மிகையளவு வினையாக்கி பயன்படுத்தப்படுகிறது. pH 7-10 என்ற அளவில் அமிலக் காரத்தன்மை கொண்ட கரைசல் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒடுக்க அமைனேற்ற வினை (போர்ச்சு வினை) திறம்பட நிகழும்[4]. டோசில் ஐதரசீனுடன் இணைத்து சோடியம் சயனோபோரோ ஐதரைடைப் பயன்படுத்தினால் கீட்டோன்களின் ஒடுக்க ஆக்சிசனேற்றம் நிகழ்கிறது. கட்டமைப்புநான்முக எதிர்மின் அயனியான BH3(CN)− இச்சேர்மத்தை உருவாக்குகிறது. தயாரிப்புசோடியம் சயனோபோரோ ஐதரைடை எளிதாக தயார் செய்ய முடியும் என்றாலும் எப்போதும் கொள்முதல் செய்யப்பட்டும் வருகிகிறது. சோடியம் சயனைடுடன் போரேன் சேர்த்து தயாரிப்பது ஒரு முறையாகும். சோடியம் போரோ ஐதரைடுடன் பாதரசம்(II) சயனைடு சேர்த்து சூடுபடுத்தி தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும். வர்த்தக மாதிரிகளை தூய்மைப்படுத்த இயலும் என்றாலும் ஒடுக்க அமைனாக்கல் விளைபொருட்களின் தூய்மையை மேம்படுத்த முடிவதில்லை[5]. இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia