சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு
சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு (Sodium tetrafluoroborate) என்பது NaBF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை அல்லது நிறமற்று உருவாகும் இவ்வுப்பு சாய்சதுர படிகங்களாக படிகமாகிறது. சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு தண்ணீரில் நன்றாகவும் (108 கி/100 மி.லி) கரிமக் கரைப்பான்களில் சிறிதளவும் கரைகிறது[1]. பற்றவைத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் சில பாய்மங்களிலும் போரான் டிரைபுளோரைடு உற்பத்தியிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[2] தயாரிப்புடெட்ரோபுளோரோபோரிக் அமிலத்தை சோடியம் கார்பனேட்டு அல்லது சோடியம் ஐதராக்சைடு சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தி டெட்ரோபுளோரோபோரேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]
போரிக் அமிலம், ஐதரோபுளோரிக் அமிலம் மற்றும் சோடியம் கார்பனேட்டு ஆகியனவற்றை வினைபுரியச் செய்தும் மாற்று வழிமுறையில் இதைத் தயாரிக்கலாம்:[2]
வினைகளும் பயன்களும்உருகுநிலை வரையிலான வெப்பநிலைக்கு டெட்ரோபுளோரோபோரேட்டை சூடாக்கும்போது இது சோடியம் புளோரைடாகவும் போரான் டிரைபுளோரைடாகவும் சிதைவடைகிறது:[4]
டெட்ரோபுளோரோபோரேட்டு எதிர்மின் அயனிக்கு இச்சேர்மமே மூலமாகும். கரிம வேதியியல் உப்புகளைத் தயாரிப்பதற்கும் அயன நீர்மங்களைத் தயாரிப்பதற்கும் இந்த எதிர்மின் அயனி பெரிதும் உதவுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia