ஜிரோ வானூர்தி நிலையம்
ஜிரோ வானூர்தி நிலையம்[1] அல்லது ஜீரோ வானூர்தி நிலையம் (Zero Airport)(ஐஏடிஏ: ZER, ஐசிஏஓ: VEZO) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜிரோவில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில், வாயூதூத் மற்றும் ஏர் இந்தியா விமானம் இந்நிலையத்திற்குத் தினசரி விமானங்களை இயக்கி வந்தன. 2008ஆம் ஆண்டில் ஏடிஆர் -42 வகுப்பு விமானங்களை இயக்க விமானநிலையத்தை மேம்படுத்துவதற்காக பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தால் ஒரு சாத்தியக்கூறுக்கு முந்தைய ஆய்வு நடத்தப்பட்டது. எல்லை சுவரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் காரணமாக, 50 இருக்கைகள் கொண்ட விமானத்திற்கு இடமளிக்க 1220 மீட்டர் ஓடுபாதையை நீட்டிக்க இயலாது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய ஓடுபாதையை ஒட்டியுள்ள நிலத்தில் 2010 மீட்டர் அளவிலான புதிய ஓடுபாதை கட்டப்பட வேண்டும் என்றும் ஏடிசி கோபுரம், தீயணைப்பு நிலையம் மற்றும் முனையக் கட்டிடம் போன்ற அனைத்து விமான நிலைய கட்டமைப்புகளும் இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டது.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia