குவாலியர் வானூர்தி நிலையம் (Gwalior Airport) (ஐஏடிஏ: GWL, ஐசிஏஓ: VIGR) எனும் பொது வானூர்தி நிலையம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின்குவாலியரில் வடகிழக்கே 10 km (6 mi) தொலைவில் மகராஜபூர் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ளது. இது மத்தியப் பிரதேசத்தின் ஆறு விமான நிலையங்களில் ஒன்றாகும். மேலும் இது மத்தியப் பிரதேசத்தின் நான்காவது பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் 760 ஏக்கர்கள் (310 எக்டேர்கள்) பரப்பில் அமைந்துள்ளது. அலையன்ஸ் ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் குவாலியருக்கு விமானச் சேவைகளை இயக்குகின்றன.
இந்த விமான நிலையம் 760.7 ஏக்கர்கள் (307.8 எக்டேர்கள்) பரப்பில் ஒரு முனையத்தில் மணிக்கு 350 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. 100-by-150-மீட்டர் (330 அடி × 490 அடி) ஏப்ரன் இரண்டு ஏர்பஸ் ஏ 320 மற்றும் ஒரு சிறிய விமானத்தை ஒரே நேரத்தில் கையாளும் திறனுடையது.[2] குவாலியர் விமானத் தளம் இரண்டு செயல்பாட்டிற்கான இணையான ஓடுபாதைகளைக் கொண்ட விமானப்படைத் தளமாகும். இரண்டாவது ஓடுபாதை பிப்ரவரி 2009 இல் கட்டப்பட்டு, அக்டோபர் 2010 இல் செயல்பாட்டுக்கு வந்தது.
விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்
மே 6, 2021 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பீச் கிராஃப்ட் 250 விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மூன்று விமானப் பணியாளர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரெம்டெசிவியர் ஊசி மருந்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.[3]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன