பாசிகாட் வானூர்தி நிலையம் (Pasighat Airport)(ஐஏடிஏ: IXT, ஐசிஏஓ: VEPG) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பாசிகாட்டில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
வரலாறு
1962ஆம் ஆண்டு இந்தியச் சீனப் போரின்போது இந்த வான்வழிப் பாதை அமைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில் வான்வழிப் பாதையை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய விமானப்படை அருணாச்சல பிரதேச அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. பிப்ரவரி 2010இல் இந்திய வான்படை, வான்வழிப் பாதையை எடுத்துக் கொண்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம், விமான நிறுத்த கவசம், சுற்றுச் சாலை மற்றும் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டது. மேம்படுத்தப்பட்ட வான்வழிப் பகுதியை ஆகஸ்ட் 2016இல் கிரண் ரிஜிஜூ திறந்து வைத்தார். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக இந்திய வான்படையின்சுகோய் எஸ்யு -30 போர் விமானம் இந்த வான்வழிப் பாதையில் தரையிறங்கியது.[1]
2016இல் மேம்படுத்தப்பட்ட வான்வழிப்பாதை திறப்பு விழா
தற்போதைய நிலை
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) பாசிகாட்டில் ஒரு சிவில் என்க்ளேவை இயக்குகிறது. புதிய பயணிகள் முனையம் 2017இல் கட்டப்பட்டது.[2]அருணாச்சல பிரதேச அரசு சார்பாக உலங்கு வானூர்தி சேவை பசிகாட் மற்றும் பல்வேறு பிராந்திய நிலையங்களுக்கு இடையே பவன் ஹான்ஸால் இயக்கப்படுகிறது.[3]
ஏப்ரல் 2018இல், ஏர் இந்தியா பிராந்திய ஏடிஆர் -42 விமானம் திட்டமிடப்பட்ட வணிக சேவைகளுக்கான தயாரிப்பில், பாசிகாட் ஏ.எல்.ஜி.யில் சோதனை தரையிறக்கத்தை மேற்கொண்டது.[4]குவகாத்தியிலிருந்துஅலையன்ஸ் ஏர் (இந்தியா) 42 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் விமானம் முதலமைச்சர் பெமா காண்டு மற்றும் துணை முதல்வர் சவுனா மெய்ன் ஆகியோருடன் விமான நிலையத்தில் தரையிறங்கி வணிக விமானச் சேவையினை 2018 மே 21 அன்று தொடங்கியது.[5] இந்த சேவையானது வட்டார இணைப்புத் திட்டம் - உடான் எனப்படும் அரசாங்கத்தின் மண்டல இணைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[6]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன