கடப்பா வானூர்தி நிலையம் (Kadapa Airport)(ஐஏடிஏ: CDP, ஐசிஏஓ: VOCP) என்பது உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது ஆந்திரப் பிரதேசம் மேற்கு கடப்பா பகுதியில் 12 கி.மீ. (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 669.5 ஏக்கர்கள் (270.9 ha) பரப்பில் ரூ. 42 கோடி.செலவில் மேம்படுத்தப்பட்ட விமான நிலையமாகும். இதை இந்திய பொது விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு 7 ஜூன் 2015 அன்று திறந்து வைத்தார்.[7] விமான நிலைய முனையக் கட்டிடம் ஒரு நேரத்தில் 100 பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரனில் இரண்டு ஏடிஆர் -72 வகை விமானங்களுக்கு இடமளிக்க முடியும்.[8]
2009இல், ஒரு புதிய 6,562 அடி × 150 அடி (2,000 m × 46 m) ஓடுபாதை கட்டுதல், இயக்குதல், மாற்றுதல் திட்ட அடிப்படையில் ரூ. 21 கோடிக்கும் மேலும், 11 கி.மீ நீளமுள்ள சுற்றுச்சுவர் ரூ. 24 கோடிக்கும் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டமாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கட்டிடம், பயணிகள் முனையம், வாகன நிறுத்துமிடம் மற்றும் உள் சாலைகள் ரூ 13 கோடியிலும் மற்ற வசதிகள் ரூ .8 கோடியிலும் உருவாக்கப்பட்டுள்ளன.[10]
ஏர் பெகாசஸ் வாரந்தோறும் மூன்று முறை ஏடிஆர் 72 சேவையைப் பெங்களூருக்கு அறிமுகப்படுத்தியபோது விமான நிலையத்திற்குத் திட்டமிடப்பட்ட வணிக விமானங்கள் 7 ஜூன் 2015 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின.[7] இருப்பினும், பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் விமானடச் சேவை விரைவில் ரத்து செய்யப்பட்டன.[11] ஏப்ரல் 2016 இல், ட்ரூஜெட் ஹைதராபாத்திற்கு விமானங்களை அறிமுகப்படுத்தியது. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டன.[12]
பிராந்திய விமான இணைப்பை அதிகரிக்க வட்டார இணைப்புத் திட்டம்-உதான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்)இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 விமான நிலையங்களில் கடப்பா விமான நிலையமும் ஒன்றாகும். மார்ச் 2017இல், ட்ரூஜெட் செப்டம்பர் 2017இல் ஐதராபாத்திற்கும், நவம்பர் 2017இல் சென்னை வழியாக மைசூருக்கும், மார்ச் 2018இல் விஜயவாடாவிற்கும் தினசரி விமானங்களை அறிமுகப்படுத்தியது.[13]
↑"TruJet Schedule"(PDF). www.trujet.com. Archived from the original(PDF) on 4 ஜூன் 2021. Retrieved 4 June 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன