கோரக்பூர் வானூர்தி நிலையம்
கோரக்பூர் வானூர்தி நிலையம் (Gorakhpur Airport) (ஐஏடிஏ: GOP, ஐசிஏஓ: VEGK)என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் அமைந்துள்ள விமான நிலையமாகும். இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பொது விமானச் சேவையினை கோரக்பூர் இந்திய வான்படை நிலையத்திலிருந்து இயக்குகின்றது. நகரிலிருந்து இந்த வானூர்தி நிலையம் 5 மைல்கள் (8.0 km) தொலைவில் 0.71 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஜூன் 2017இல், பொது முனையக் கட்டிடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் திறந்து வைத்தார். இது கடத்தி பட்டையுடன் அடுத்த மாதங்களில் விரிவாக்கப்பட்டது.[1] இராணுவ விமான நிலையம்கோரக்பூர் விமானப்படை இந்திய விமானப்படைக்குச் சொந்தமானது. எண் 16 படை ஐ ஏ எப் இங்கிருந்து செயல்படுகிறது. இந்த படைப்பிரிவுகள் வழக்கமான இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன. இது தவிர மீட்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்கிறார்கள். எண் 101 உலங்கு வானூர்தி பிரிவு கோரக்பூர் ராணுவ விமான தளத்தில் அமைந்துள்ளது. செப்கேட் ஜாகுவார் விமானங்களும் கோரக்பூரில் நிறுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புகோரக்நாத் விமான நிலையத்தில் ஒரு ஓடுபாதை 11/29 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் 2,743 by 46 மீட்டர்கள் (9,000 அடி × 150 அடி) ஆகும். தற்போதுள்ள முனையம் 200 பயணிகளை அதிகபட்சமாகக் கையாளக்கூடியது. 23,500 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] 28 மார்ச் 2021 அன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், தற்போதுள்ள முனையக் கட்டடத்தை. ₹26.87 கோடிசெலவில் நிறுவப்பட்டதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இது 3440 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.[3] வருகை மண்டபத்தில் இரண்டு கடத்திப் பட்டைகள், 10 சோதனை-அறை, தானியங்கு ஏணி, நகரும் படிக்கட்டுகள், உணவகம் மற்றும் முதல் தளத்தில் கூடுதல் பாதுகாப்பு பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட முனையக் கட்டிடம் 200 பயணிகளை அதிகபட்சமாக நெரிசல் நேரங்களில் கையாள முடியும்.[4] விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
போக்குவரத்துSee source Wikidata query and sources.
புதிய கோரக்பூர் விமான நிலையம்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாடு, விரிவாக்கத்தில் உள்ள தடைகள் காரணமாக, கோரக்பூரின் விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரிப்பினை எதிர்கொள்ள வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் 300 ஏக்கரில் கோரக்பூருக்குப் பசுமை கள விமான நிலையம் முன்மொழியப்பட்டுள்ளது.[9] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia