தாமன் வானூர்தி நிலையம்
தாமன் வானூர்தி நிலையம் (Daman Airport) என்பது இராணுவ விமான தளம். இது இந்திய ஒன்றிய பகுதியான தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவில் உள்ள தாமனில் அமைந்துள்ளது. இது இந்தியக் கடலோர காவல்படை விமான நிலையமாகவும் பொதுமக்கள் விமானங்களுக்கு ஏடிசி மற்றும் நிறுத்தும் வசதிகளை வழங்குகிறது.[1] வரலாறுதாமன் விமான நிலையம் 1950களில் போர்த்துகேய இந்திய அரசால் நிறுவப்பட்டது. போர்த்துகீசிய இந்தியா விமானச்சேவை ஆகஸ்ட் 29, 1955 அன்று தாமானுக்கு விமானச் சேவை நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிறுவனம் தாமனைக் கோவா, தியூ மற்றும் கராச்சியுடன் 1961 வரை இணைத்துச் சேவையாற்றியது. இந்திய வான்படை இந்நிலையத்தினை தமது கட்டுப்பாட்டில் டிசம்பர் 1961இல் கொண்டுவந்தபோது போர்த்துகீசிய இந்தியா விமானச்சேவை தனது சேவையினை நிறுத்தியது.[2] இந்தியக் கடலோர காவல்படை தனது முதல் டோர்னியர் படைப்பிரிவை 1987 ஜனவரியில் தாமனில் நிறுத்தியது. அதன்பின்னர் 1987 அக்டோபரில் முதல் முழு விமான நிலையத்தினை அமைத்தது.[1] அமைப்பு![]() தாமன் விமான நிலையத்தில் இரண்டு குறுக்கிடும் அஸ்பால்ட் ஓடுபாதைகள் உள்ளன. முக்கிய ஓடுபாதை 03/21 5910 (1801 மீ) அடி நீளமும் 45 மீ அகலமும் கொண்டது. இரண்டாம் நிலை ஓடுபாதை 10/28 3284 அடி (1001 மீ) நீளமும் 25 மீ அகலமும் கொண்டது. விமான நிலைய கண்காணிப்பு ராடார் (ஏ.எஸ்.ஆர்), துல்லிய அணுகுமுறை பாதை காட்டி (பிஏபிஐ), டாப்ளர் மிக அதிக அதிர்வெண் ஓம்னிடிரெக்ஷனல் ரேடியோ ரேஞ்ச் (டி.வி.ஓ.ஆர்) - தூர அளவீட்டுக் கருவி (டி.எம்.இ) மற்றும் திசை அல்லாத பெக்கான் (என்.டி.பி) ஆகியவை வழிசெலுத்தல் உதவிகளாக உள்ளன.[1] இந்திய கடலோர காவல்படை விமான நிலையம்இந்த நிலையம் அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இந்த நிலையம் வடமேற்கு கடற்கரையில் கடல்சார் உளவு மற்றும் SAR செயல் எல்லையினை கொண்டுள்ளது. டோர்னியர் மற்றும் சேடக் விமானங்கள் கரையோரத்தில் செயல்படும் கடமைகளுக்காகத் தாமனிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. சாகச நடவடிக்கைகளை நடத்துவது ஒரு வழக்கமான அம்சமாகும். இதற்காக இந்த நிலையத்தில் ஒரு இலகு ரக விமானம் மற்றும் ஒரு பவர் கிளைடர் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய கடற்படை மாணவர்கள் விமான நிலையத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.[1] விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்தற்பொழுது திட்டமிடப்பட்ட வணிக விமானச் சேவை இந்நிலையத்திலிருந்து இல்லை. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia