தோடர் வேலைப்பாட்டு துணி
சிறப்புகையால் நெய்யப்படும் வெள்ளைநிற துணிமீது, நூல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எம்ப்ராய்டரி எனப்படும் துணி வேலைப்பாடுகள் செய்யப்படுகிறது. சுமார் ஒன்பது அடி நீளம் கொண்ட எம்ப்ராய்டரியின் நுனிப்பகுதி சிவப்பு மற்றும் கருப்பு நிற முடிச்சுகள் கொண்டது. இந்தத் துணி வேலைப்பாடு பெரும்பாலும் துணியின் பின் பக்கமாக செய்வதால், துணியின் முன்புறம் அது புடைப்பாக வந்து துணிக்கு மெருகூட்டுகிறது. இந்தத் துணி வேலைபாடு கலைப் பாரம்பரியமாக தலைமுறைகளுக்கு கைமாறி வருவதால் இதெற்கென தனி வழிகாட்டு புத்தகங்கள் என எதுவும் இல்லை.[3] இந்த ஆடையில் மரபாக ஆறு, தேன்கூடு, மயில், சூரியக் கதிர்கள், பூ என தங்கள் வாழ்வுடன் ஒன்றிய விசயங்களை மட்டும் வேலைப்பாடாக செய்கின்றனர். இதில் பெரும்பாலும் கருப்பு, சிவப்பு வண்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.[4] பொதுவாக ஒரு சால்வை தைக்க குறைந்தது 15 முதல் 20 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர்.[5] தற்போது உடம்பை சுற்றி போர்த்தப்படும் துணிகள் மட்டும்மல்லாது, சுவர் அலங்காரங்கள், மேசை விரிப்புகள், தோள் பைகள் போன்றவற்றிலும், இந்த தோடா வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. புவிசார் குறியீடுபூத்துக்குளி சால்வைக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.[6]. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia