விருப்பாச்சி மலை வாழைப்பழம்
விளக்கம்இந்த வாழை மேற்கு தொடர்ச்சி மலையில் பழனி மலையை ஒட்டி அதிக உயரத்தில் பயிரிடப்படுகிறது. இது பெரும்பாலும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது. 1990களில், வாழை கொத்து மேல் வைரசு நோயினால் இந்த வாழைப் பயிர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், சாகுபடி பகுதியில் 90%க்கும் அதிகமாகச் சாகுபடி குறைந்தது. இதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், கடந்த பத்தாண்டுகளில் சாகுபடி பகுதி மீண்டும் அதிகரித்துள்ளது.[3][4] ஒவ்வொரு வாழை மரமும் 70-100 பழங்களைக் கொண்டிருக்கும். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு வாழைக்குலை அறுவடை செய்யப்படும். பழங்கள் மஞ்சள்-பச்சை நிறத்தில் உள்ளன. இதன் தனித்துவமான வாசனை, சுவைக்காக இது அறியப்படுகின்றன. பழுத்த பழங்கள் தடிமனான தோலுடன் உறுதியாக இருக்கும். பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தயாரிக்கப்படும் பழனி பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களில் இந்தப் பழமும் ஒன்றாகும்.[4][3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia