நாகர்கோவில் கோவில் நகைகள்

நாகர்கோவில் கோவில் நகைகள்
குறிப்புஅணிகலன்-நாகர்கோவில் பகுதி
வகைகைவினைப்பொருட்கள்
இடம்நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2007–08
பொருள்தங்கம், விலைமதிப்பற்ற கற்கள்


நாகர்கோவில் கோவில் நகைகள் (Temple Jewellery of Nagercoil) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வகை தங்க நகைகள் ஆகும்.[1] இந்த வகைத் நகைகளுக்கு 2007–08-ஆம் ஆண்டில் இந்தியப் புவிசார் குறியீடு தகுதி அறிவிக்கப்பட்டது.

இந்த நகைகள் தங்கத்தால் ஆனவை. அதில் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நகைகள் செய்வதற்கு "குச்சு கல்" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகைச் சிவப்பு, பச்சை நிறக் கல் பயன்படுத்தப்படுகிறது. இதன் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் ஆட்சிக் காலத்திற்கு முந்தையது. இந்த நகைகள் ஆரம்பத்தில் இந்துக் கடவுள்கள், தெய்வங்களின் சிலைகளை அலங்கரிப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டன.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Application details". Government of India. Retrieved 1 December 2023.
  2. "Nagercoil temple jewellery made with peculiar stones gets GI tag". https://timesofindia.indiatimes.com/city/trichy/nagercoil-temple-jewellery-made-with-peculiar-stones-gets-gi-tag-geographical-indications-tag/articleshow/65095824.cms. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya