ஈத்தாமொழி நெட்டைத் தென்னை

ஈத்தாமொழி நெட்டைத் தென்னை
குறிப்புஈத்தாமொழிப் பகுதியில் வளர்க்கப்படும் தென்னை
வகைவிவசாயப்பொருள்
இடம்ஈத்தாமொழி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2008–09


ஈத்தாமோழி நெட்டைத் தென்னை (Eathomozhy Tall Coconut) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழிப் பகுதியில் வளர்க்கப்படும் ஒரு வகைத் தென்னை மரமாகும்.[1] இது 2008-09-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு தகுதி பெற்ற விவசாயப் பொருளாக அறிவிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டில், இந்திய அஞ்சல் துறை இதைக் குறிக்கும் 5 முத்திரையை வெளியிட்டது. [2]

விளக்கம்

ஈத்தாமொழி நெட்டைத் தென்னை இந்தியாவின் தெற்குக் கடற்கரையில் காணப்படும் உப்புத்தன்மை வாய்ந்த செம்மண்ணில் வளரும் ஒரு வகையான தேங்காய் ஆகும். மரங்கள் உயரமானவை. சுமார் 30 அடி வரை உயரம் வளரும். வலுவான தண்டுகளுடன், இதன் விதானம் சுமார் 30 முதல் 36 தடித்த, நீண்ட இலைகளுடன் மிகப் பெரிய அளவிலான காய்களைக் கொண்டுள்ளது. இதன் தேங்காய் அதிக நார்ச்சத்து, அடர்த்தியான ஓடு, பெரிய கொப்பரையைக் கொண்டுள்ளது. இந்த மரங்கள் சராசரியாக 80 முதல் 100 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை. மேலும் இவை பெரும்பாலும் மழை பெய்யும் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. தென்னை மரங்களைப் பாதிக்கும் பாரம்பரிய நோய்களுக்கு எதிராக இவை அதிக எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன. தேங்காய் எண்ணெய் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியிலும், தடிமனான நார் தென்னை நார் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Application details". Government of India. Archived from the original on 3 April 2023. Retrieved 1 December 2023.
  2. "Indian stamp 2023:Eathomozhy tall coconut". World wide mint. Archived from the original on 27 May 2024. Retrieved 1 December 2023.
  3. "Eathomozhy tall coconut of Tamil Nadu". Sahasa. 15 March 2015. Archived from the original on 27 May 2024. Retrieved 1 December 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya