கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி
ஈரமாவு அரவைப்பொறிஒரு ஈரமாவு அரவைப்பொறியானது உணவு தானியங்களை ஈரமாக அரைத்து ஈரமாவு தயாரிப்பதற்குப் பயன்படும் வீட்டு பயன்பாட்டிற்கான இயந்திரமாகும். தென்னிந்திய உணவு வகைகளில் தோசை, இட்லி, வடை, ஆப்பம் மற்றும் பனியாரம் போன்ற பிரபலமான உணவுகளை தயாரிப்பதற்கு ஈரமாவு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பொறியில் கிரானைட் கற்கள அடிப்பாகம் இருக்கும், ஓர் உள்ளீடற்ற உருளையும் மின்சார மோட்டரின் உதவியுடன் சுழலும் கைப்பிடிகொண்ட கல்லும் பொருத்தப்பட்டிருக்கும். மின் மோட்டார் இயங்கும்பொழுது உருளையும் அதனோடு பொருத்தப்பட்ட கல்லும் எதிரெதிராகச் சுழன்று உணவு தானியங்கள் அவற்றுக்கிடையே நசுக்கப்படுகின்றன.[3] வரலாறுபி. சபாபதி என்பவர் 1955இல் கோவையில் ஈரமாவு அரவைப்பொறியினை உருவாக்கினார்.[4][5] சபாபதி இத்தயாரிப்பினை சென்னை, மதுரை போன்ற பிற நகரங்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1963 ஆம் ஆண்டில், பி. பி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் லட்சுமி கிரைண்டர் என்ற வணிகப்பெயர் கொண்ட முன்னணி ஈரமாவு அரவைப்பொறி இயந்திரங்களை உற்பத்தி செய்யத்தொடங்கினார். இது ஈரமான அரைப்பான்களின் வணிக பிரபலத்திற்கு வழிவகுத்தது.[6] 1975 ஆம் ஆண்டில், ஆர். துரைசாமி என்பவர் சாய்க்கத் தக்க ஈரமாவு அரைப்பான்களைக் கண்டுபிடித்தார்.[7] எல். ஜி வரதராஜ் என்பவர் மேசைமேல் வைக்கக்கூடிய ஈரமாவு அரைப்பானை அறிமுகப்படுத்தினார், இது தரையில் வைக்க வேண்டிய பொறிகளுக்கு மாற்றாய் அமைந்தது.[8] தொழில்![]() இந்த தயாரிப்பு நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், கோயம்புத்தூர் இயற்கையாகவே ஈரமான அரைப்பான்கள் தயாரிப்பதற்கான மையமாக உருவெடுத்தது. மேலும் இங்கு கிடைக்கும் கிரானைட் கற்கள், மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் தேவையான கனரக உபகரணங்களான கடைசல் இயந்திரம், துளையிடுதல் மற்றும் அரைக்கும் இயந்திரங்கள் போன்ற மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மை ஆகியவை எல்லாம் இணைந்து, கோயமுத்தூரில் தொழில்துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இந்தியாவில் ஈரமான அரைப்பான்களின் மொத்த மாத உற்பத்தியில் 75% பங்களிப்புக்கு இந்த நகரம் பங்களிக்கிறது.[9] இந்தத் தொழில் 20,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பைக் வழங்கக்கிறது. மேலும் 50,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது. 2011 இல், கூட்டாக இத்தொழில் மூலம் ரூ,225 கோடி ($33 மில்லியன்) வருடாந்திர உற்பத்தியை எட்டியது. இது மேலும் வளர்ச்சியடைந்து 2015 இல் ரூ.2800 கோடியாக ($410 மில்லியன்) உயர்ந்தது. சமீபத்திய முன்னேற்றங்கள்2007 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு மூலம் ஈரமாவு அரவைப்பொறிக்கான மூலப்பொருட்கள் உற்பத்திக்காக, ரூ. 28.8 மில்லியன் (US$420.000) செலவில் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது.[10] பசுமை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக தமிழக அரசு கிட்டத்தட்ட 22.5 மில்லியன் ஈரமாவு அரைப்பான்களை கொள்முதல் செய்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தொழில் பத்து மடங்கு வளர்ந்தது.[9][11] 2015 ஆம் ஆண்டில், புதுச்சேரி அரசு 3.37 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஈரமாவு அரைப்பான்களை விநியோகம் செய்ய ரூ. 120 கோடி செலவில் ஈரமாவு அரைப்பான்களைக் கொள்முதல் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.[12] ஈரமான அரைப்பான்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து அதை இடைத்தரகர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு சில்லறை வியாபாரிகள் மூலம் விற்கப்படுகின்றன, 2014 முதல், ஈ-காமர்ஸ் வ்ணிகம் மூலம் சில்லறை விற்பனை மொத்த விற்பனை ஆகியவை இதன் தரமான வணிகக் கட்டமைப்புக்குக் கணிசமாக உதவுகிறது.[13] புவியியல் அறிகுறி2005 ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் ஈரமாவு அரைப்பான்களின் புவிக்குறியீட்டு எண் பெற தமிழக அரசு விண்ணப்பித்தது. இந்திய அரசு 2005-06 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக புவியியல் அடையாளமாக இதை அங்கீகரித்தது.[2] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia