செட்டிநாடு கொட்டான்
விளக்கம்தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியில் உலர்ந்த பனை ஓலைகளிலிருந்து நெய்யப்படும் பாரம்பரியக் கூடைகள் செட்டிநாடு கொட்டன்கள் ஆகும். பனை ஓலைகள் பழுப்பு நிறமாக மாறும் வரை ஒரு வாரம் வெயிலில் உலர்த்தப்படுகின்றன. "சத்யாகம்" எனப்படும் ஊசி போன்ற கருவியைப் பயன்படுத்தி மைய நரம்புகள் அகற்றப்பட்டு, தனிப்பட்ட இலைத் தண்டு கையால் பிரிக்கப்படுகின்றன. பிரித்தெடுக்கப்பட்ட இலையினை மென்மையாக்கத் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டு தேவையான அளவில் வெட்டப்படுகின்றன. இலைகளுக்கு வண்ணம் தீட்டக் கரிமச் சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பனைக் கீற்றுகளைக் கொண்டு கைகளால் ஒரு சிக்கலான வடிவத்தில் கொட்டான் நெய்யப்படுகின்றன. கொட்டானின் வலிமையை அதிகரிக்க விளிம்புகளில் பல அடுக்குகளாகப் பின்னப்படுகிறது. மேலும் இந்த ஓரங்களில் இவற்றை நிலையாக வைத்திருக்க நூல்களால் இணைக்கப்படுகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia