மணப்பாறை முறுக்குமணப்பாறை முறுக்கு பரவலாக அறியப்பட்ட முறுக்கு வகைகளில் ஒன்று. இதன் தனித்துவமான சுவையினால் பிரபலமாகியுள்ளது.[1] இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகரத்தின் பெயரிடப்பட்ட சிற்றுண்டியாகும். சிறப்புதமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பிற இந்திய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட மணப்பாறை முறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மணப்பாறை முறுக்கின் சுவைக்குக் காரணம் அங்கு நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இயற்கையாக உப்புச்சுவை கொண்டமையேயாகும்.[2] இந்த நீரைக் கொண்டு முறுக்கு தயாரிக்கப்படுவதால் அவை சுவையாக இருப்பதாகப் பல ஆண்டுகளாக முறுக்குத் தொழில் செய்துவரும் வியாபாரிகள் கூறுகின்றனர்.[3] குடிசைத் தொழில்ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிசைத் தொழிலாகத் தொடங்கப்பட்ட இந்த முறுக்கு வியாபாரம், தற்போது மணப்பாறை நகரில் சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia