நந்துர்பார்
நந்துர்பார் (Nandurbar) ⓘ, இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் வடக்கில் உள்ள காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள நந்துர்பார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மலைப் பிரதேசமான நந்துர்பார் நகரத்திற்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் தப்தி ஆறு பாய்கிறது. இது மும்பைக்கு வடகிழக்கே 432 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 33 வார்டுகளும், 20,904 வீடுகளும் கொண்ட நந்துர்பார் நகரத்தின் மக்கள் தொகை 1,11,037 ஆகும். அதில் ஆண்கள் 57,412 மற்றும் 53,625 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,281 மற்றும் 13,657 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.32%, இசுலாமியர் 21.43%, சமணர்கள் 2.11%, சீக்கியர்கள் 0.28%, கிறித்தவர்கள் 0.94% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர். [2] போக்குவரத்துகுஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் உள்ள நந்துர்பார் தொடருந்து நிலையம்[3]குஜராத், மத்தியப் பிரதேசத்தின் நகரங்களுடன் இணைக்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia