நவல்பராசி மேற்கு மாவட்டம்
நவல்பராசி மேற்கு மாவட்டம் (Nawalparasi (West of Bardaghat Susta), நேபாள நாட்டின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இது லும்பினி மாநிலத்தின் 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் இராமகிராமம் நகராட்சி ஆகும்.[1] முன்னர் இந்த மாவட்டம் நவல்பராசி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 20 செப்டம்பர் 2015ம் ஆண்டில் நவல்பராசி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு நவல்பராசி மேற்கு மாவட்டம் நிறுவப்பட்டது. மக்கள் தொகை பரம்பல்இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 634.88 சதுர கிலோமீட்டர்கள் (245.13 sq mi) மற்றும் மக்கள் தொகை 3,21,058 ஆகும். போச்புரி மொழி 55.7%, [2] நேபாளி மொழி 26.8% மற்றும் தாரு மொழி, மைதிலி மொழி, குரூங் மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்ட மக்கள் தொகை இந்து சமயத்தவர்கள் 88.5%, இசுலாமியர்கள் 6.8%, பௌத்தர்கள் 3.4%, கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.3% ஆக உள்ளனர்.[3]இதன் சராசரி எழுத்தறிவு 66.6% ஆக உள்ளது. [4] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் 7 நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமப்புற நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]அதில் 3 நகர்புற நகராட்சிகளாகவும்; 4 கிராமிய நகராட்சிகளாகவும் உள்ளது.[6] நகர்புற நகராட்சிகள்
கிராமிய நகராட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia