இலாம் மாவட்டம்![]() இலாம் மாவட்டம் (Ilam district) (நேபாளி: इलाम जिल्लाⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில், மாநிலம் எண் 1-இன் மேச்சி மண்டலத்தில் இமயமலையின் 3,636 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டமாகும். இது நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் இலாம் நகரம் ஆகும். இலாம் நகரம் காத்மாண்டிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகையியல்இலாம் மாவட்டத்தின் பரப்பளவு 1703 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,90,254 ஆக உள்ளது.[1] வேளாண்மை![]() இம்மாவட்டத்தில் பயிரிடப்படும் இலாம் தேயிலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஏலக்காய், பால் பொருட்கள், இஞ்சி மற்றும் உருளைக் கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
கிராம வளர்ச்சிக் குழுக்கள் மற்றும் நகராட்சிகள்![]() இலாம் மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகளும், 45 கிராம வளர்ச்சிக் குழுக்களும் செயல்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia