நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல் போஜ்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
போஜ்பூர் மாவட்டம் (Bhojpur District) (நேபாளி: भोजपुर जिल्लाListenⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் உள்ள இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போஜ்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போஜ்பூர் மாவட்டம் 182,459 மக்கள் தொகையும்[1], 1,507 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.[1]
இம்மாவட்டத்தின் வடக்கு மலைப் பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் வளர்கிறது.
புவியியல்
போஜ்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்
நேபாளத்தின் எட்டு வகையான தட்ப வெப்ப மண்டலங்களில் போஜ்பூர் மாவட்டம், ஐந்தாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
3% மாவட்டப் பரப்பளவு 300 மீட்டர் உயரத்திலும், 31% பகுதிகள் 300 முதல் 1000 மீட்டர் உயரத்திலும், 50% பகுதிகள் 1000 முதல் 2000 மீட்டர் உயரத்திலும், 15% பகுதிகள் 2000 முதல் 3000 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.