நான்காம் அலெக்சாண்டர்
![]() நான்காம் அலெக்சாண்டர் (Alexander IV) (கிரேக்கம்: Ἀλέξανδρος Δ΄; 323–309 கி மு) என்பவர் பேரரசர் அலெக்சாண்டர் – பாக்திரியா நாட்டு இளவரசி ரோக்சானாவிற்கும் மகனாகப் பிறந்தவர். இவரை ஏஜியஸ் என்றும் அழைப்பர்.[1] பிறப்புபேரரசர் அலெக்சாண்டருக்கும், பாரசீகத்தின் பாக்திரியா பகுதியின் சோக்தியானாவின் இளவரசி ரோக்சனாவிற்கும் பாபிலோனில் ஆகஸ்டு, கி மு 323இல் பிறந்தவர் நான்காம் அலெக்சாண்டர். [2][3][4] இவர் மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பின் பேரன் ஆவார். நான்காம் அலெக்சாண்டர், தன் தாயின் கருவில் பாலினம்அறியாத நிலையில், தந்தையான பேரரசர் அலெக்சாண்டர் இறக்கவே, அலெக்சாண்டரின் வாரிசு குறித்து கிரேக்கப் படைத்தலைவர்கள்; கிரேக்க ஆளுநர்கள் மற்றும் அரச குடும்பத்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டால் உட்பிளவுகள் உண்டாகியது. பின்னர் அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனாவிற்கு ஆகஸ்டு, கி மு 323இல் நான்காம் அலெக்சாண்டர் பிறந்ததால், அக்குழந்தையின் அரசப் பிரதிநிதியாக பெர்டிக்காஸ் என்பவர் கிரேக்கப் பேரரசை ஆள்வது தீர்மானிக்கப்பட்டது. கிரேக்கப் பேரரசின் பகுதியான எகிப்தில் ஏற்பட்ட கடுமையான இராணுவ கிளர்ச்சிகளுக்குப் பிறகு, மே அல்லது சூன், கி மு 320இல் பெர்டிக்காஸ் கிரேக்க பேரரசின் உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.[5]பின்னர் ஆண்டிபாட்டர் , இளவரசன் நான்காம் அலெக்சாண்டரின் அரசப் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை வழிநடத்தினான். உள்நாட்டுப் போர்கிரேக்கப் படைத்தலைவர் சசாண்டர், தாலமி சோத்தர் மற்றும் ஆண்டிகோணஸ் போன்ற பிற கிரேக்கப் படைத்தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து நான்காம் அலெக்சாண்டரின் பேரரசு மீது போர் தொடுத்தனர். போரின் முடிவில் கி மு 318இல் சசாண்டர் மாசிடோனியாவை கைப்பற்றி ஆண்டார். பேரரசர் அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனாவும், மகன் நான்காம் அலெக்சாண்டரும் எபிரஸ் நாட்டின் பகுதிக்கு தப்பி ஓடினர். அலெக்சாண்டரின் தாயான ஒலிம்பஸ், தன் உறவினர்களான எபிரஸ் நாட்டுப் படைகளுடன் போர் தொடுத்து, மீண்டும் மாசிடோனியாவைக் கைப்பற்றினர். சசாண்டர் மீண்டும் கி மு 316இல் மாசிடோனியாவைக் கைப்பற்றினார். நான்காம் அலெக்சாண்டரும், அவரது தாயும் போர்க் கைதிகளானர்கள். கிரேக்கப் படைத்தலைவர்களான சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் மற்றும் தாலமி சோத்தர் ஆகியவர்களிடையே நடந்த மூன்றாம் வாரிசுரிமைப் போர் கி மு 311இல் முடிவுக்கு வந்தது. இப்போரின் முடிவில் சசாண்டர் மாசிடோனியாவின் மன்னரானார். இறப்பு![]() பேரரசர் அலெக்சாண்டரின் மகன் நான்காம் அலெக்சாண்டர் தமது 14வது வயதில், சசாண்டர் எனும் கிரேக்கப் படைத்தலைவரால் கி மு 309இல் இரகசியமாகப் நஞ்சிடப்பட்டு கொல்லப்பட்டார். கிரேக்கப் பேரரசின் வாரிசுரிமைப் போர்கள்![]() கி மு 311இல் நடந்த முதல் வாரிசுரிமைப் போரின் முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். பண்டைய எகிப்து பகுதிகளுக்கு தாலமி சோத்தர் எனும் கிரேக்கப் படைத்தலைவர் பார்வோனாக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார். இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia