நான்காம் ராமேசஸ்
![]() நான்காம் ராமேசஸ் (Ramesses IV) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார்.[4]இவர் எகிப்தை கிமு 1155 முதல் கிமு 1149 முடிய 6 ஆண்டுகளே ஆண்டார். [5] இறப்புஆறு ஆன்டு ஆட்சிக் காலத்திற்கு பின் இறந்த நான்காம் ராமேசஸ்சின் மம்மியை மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது. 1898-இல் மன்னர்கள் சமவெளியில் அகழ்வாய்வு செய்த போது இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் நான்காம் ரமேசஸ் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. நான்காம் ரமேசஸ் மறைவிற்குபின் அவரது மகன் ஐந்தாம் ராமேசஸ் ஆட்சி பீடம் ஏறினார்.[6] பார்வோன்களின் அணிவகுப்பு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் நான்காம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7] இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia