இரண்டாம் சாம்திக்
![]() இரண்டாம் சாம்திக் (Psamtik II) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 595–589 வரை 6 ஆண்டுகள் ஆண்டார்.[1] இவர் இரண்டாம் நெச்சோவின் மகன் ஆவார்.[2] இரண்டாம் சாம்திக் கிமு 592-இல் நூபியா எனும் தற்கால சூடான் நாட்டின் வடக்கு பகுதியை வென்று, பின்னர் குஷ் இராச்சியத்தை வென்றார்.[3] நினைவுச் சின்னங்கள்கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில், இரண்டாம் சாம்திக் மற்றும் அவரத் மகன் ஆப்ரீஸ் ஆகியோர் எகிப்தியக் கோயில்களை நிறுவினர்.[4]தனது நூபியா மற்றும் குஷ் இராச்சிய வெற்றிகளை நினைவுப்படுத்தும் வகையில், இரண்டாம் சாம்திக் 21.79 மீட்டர் உயரத்தில் இரண்டு கல்தூபிகளை ஹெல்லியோபோலிஸ் நகரக் கோயிலில் நிறுவினார். இவற்றில் ஒரு கல்தூபியை உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் பெயர்த்துக்கொண்டு கிமு 10-இல் உரோமில் நிறுவினார்.[4]மற்றொன்றை கிமு 525-இல் பாரசீக அகாமனிசியர்கள் உடைத்தெறிந்தனர். இரண்டாம் சாம்திக், அமூன், மூத் மற்றும் கோன்சு ஆகிய எகிப்தியக் கடவுளர்களுக்கு ஹிப்பிஸ், கார்கா பாலைவனச் சோலையில் கோயில் மற்றும் சிலைகளை எழுப்பினார்.[5] ![]() ![]() இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia