ஐந்தாம் ராமேசஸ்
![]() ஐந்தாம் ராமேசஸ் (Ramesses V) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 20-ஆம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவான். நான்காம் ராமேசசின் மகனான ஐந்தாம் ராமேசஸ் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1149 முதல் கிமு 1145 முடிய 4 ஆண்டுகளே ஆண்டார். இவர் எகிப்திய தலைமைக் கடவுளான அமூனின் தலைமைப் பூசாரியாக விளங்கினார். எலிபென்டைன் தீவில் கிடைத்த பாபிரஸ் எனும் காகிதத்தில் எழுதப்பட்ட பண்டைய எகிப்திய வரலாற்றுக் குறிப்புகளில், ஐந்தாம் ராமசேஸ் ஆட்சியின் போது, எலிபென்டைன் தீவின் அமூன் கோயில் பூசாரிகள், கோயில் நிதியை மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளது. எகிப்தின் விளைநிலங்கள் தீபையின் அமூன் கோயிலின் பூசாரிகளுக்கு சொந்தமாக இருந்த்து. மேலும் இவரது ஆட்சியில் லிபியர்கள் எகிப்தை முற்றுகை இட முயற்சிகள் நடைபெற்றது. ஐந்தாம் ராமேசசின் மம்மி 1898-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அம்மை நோயால் இறந்தது குறித்து, அவரது முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகள் மூலம் தெரிய வந்ததது.[1][2] பார்வோன்களின் அணிவகுப்பு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் ஐந்தாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [3][3] இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia