முதலாம் அமெனம்ஹத்
முதலாம் அமெனம்ஹத் (Amenemhat I - Amenemhet I) பொற்காலத்திய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தை நிறுவியவரும், வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார்.[1] இவர் கிமு 1991 - கிமு 1962 முடிய 29 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[2] மேலும் இவர் கிமு 1939 முதல் கிமு 1910 முடிய ஆட்சி செய்ததாக தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[3] இவர் மெசொப்பொத்தேமியா மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியா பகுதிகளை இராணுவ நடவடிக்கைகள் மூலம் வென்றவர் என குனும்ஹொதேப் கல்வெட்டுக்கள் கூறுகிறது.[4] மறைவு மற்றும் முதலாம் அமெனம்ஹத்தின் பிரமிடுமுதலாம் அமெனம்ஹத் தன் மகன் முதலாம் செனுஸ்ரெத்தால் அல்லது மெய்காவலர்களால் கொல்லப்பட்டதாகவும் பல்வேறாக பண்டைய எகிப்திய இலக்கியங்கள் கூறுகிறது. மேல் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதியின் மேற்கே அமைந்த முதலாம் அமெனம்ஹத்தின் கல்லறைக் கோயில் பிரமிடு மென்மையான சுண்ணாம்புக் கற்களால் நிறுவப்பட்டுள்ளது. படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia