பாகெலாலான் வானூர்தி நிலையம்
பாகெலாலான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKM, ஐசிஏஓ: WBGQ); (ஆங்கிலம்: Ba'kelalan Airport (KIA); மலாய்: Lapangan Terbang Ba'kelalan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு, லாவாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2] ஒன்பது கிராமங்களின் குழுமத்தை பாகெலாலான் என்று அழைக்கிறார்கள். இந்தக் கிராமக் குழுமம் மலிகான் பீட பூமியில் (Maligan Highlands); கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி (910 மீ) உயரத்தில் உள்ளது. இந்தோனேசியா கலிமந்தான் எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும்; சரவாக் லாவாஸ் நகரத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[3] பொதுபாகெலாலான் மலைப்பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் லுன் பாவாங் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான மருத்துவப் பொருட்கள்; மற்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லவும்; அங்கு உள்ளவர்களை பாரியோ; லாவாஸ்; மிரி நகரங்களுக்குக் கொண்டு வரவும் இந்த வானூர்தி நிலையம் பயன்படுகிறது. 19 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பாகெலாலான் எனும் பெயர் கெலாலான் நதியின் (Kelalan River) பெயரில் இருந்து உருவானது. ’பா’ எனும் முன்சொல் லுன் பவாங் மொழியில் ஈரமான நிலங்கள் என்று பொருள். இரண்டும் சேர்ந்து பாகெலாலான் என்று ஓர் இடத்தின் பெயரானாது.[4] மலை உப்புகுளிர்ந்த மலைக் காலநிலையில், இங்கு ஆப்பிள், மாண்டரின் ஆரஞ்சு போன்ற பழ மரங்கள் வளர்க்கப் படுகின்றன. இங்கு அரிசியும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மலை உப்பு அருகிலுள்ள மலைகளில் இருந்து கிடைக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.[4][5] சேவை
விபத்து
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia