மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர்
மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Communications of Malaysia; மலாய்: Menteri Komunikasi Malaysia) என்பவர் மலேசிய தகவல் தொடர்புதுறை மற்றும் இலக்கவியல் அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார். முன்பு இந்த அமைச்சு, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் புதிய பெயரில் ஓர் அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். எனினும், டிசம்பர் 2023-இல் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில், மலேசிய தகவல் தொடர்புதுறை மற்றும் இலக்கவியல் அமைச்சில் இருந்து இலக்கவியல் அமைச்சு பிரிக்கப்பட்டு, இலக்கவியல் அமைச்சர் எனும் ஓர் அமைச்சர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. அமைப்பு
தகவல் தொடர்புதுறை அமைச்சர்களின் பட்டியல்தகவல் தொடர்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்[1] அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia