மலேசிய மனிதவள அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Human Resources of Malaysia; மலாய்: Menteri Sumber Manusia Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின்மனிதவள அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.
வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் மலேசியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடி வழங்குவதில் முன்னணி வகிக்கும் இந்த அமைச்சு; தொழிற்சங்கங்கள் (Trade Unions), தொழில்துறை உறவுகள் (Industrial Relations), சமூக பாதுகாப்பு (Social Security) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு முதலிடம் வழங்குகிறது.[1]
அமைப்பு
மனிதவள அமைச்சர்
மனிதவள துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
சட்டப் பிரிவு (Legal Advisor Office)
உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
துணை பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் பன்னாடு)
கொள்கைப் பிரிவு (Policy Division)
தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Institute of Labour Market Information and Analysis)
பன்னாட்டுப் பிரிவு (International Division)
தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் (National Wages Consultative Council
துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
வளர்ச்சி, நிதி மற்றும் மனித வளப் பிரிவு (Development, Financial and Human Resources Division)
மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
கணக்கு பிரிவு (Account Division)
தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
ஆய்நர் மற்றும் அமலாக்கப் பிரிவு (Inspectorate and Enforcement Division)