மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்
மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister in the Prime Minister's Department; மலாய்: Menteri di Jabatan Perdana Menteri Malaysia) என்பவர் மலேசியப் பிரதமர் துறையின் அமைச்சர் ஆகும். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக உள்ளார்; மற்றும் அவர் பிரதமர் துறையின் மூலமாக ஒரு துறையை நிர்வாகம் செய்கிறார். அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் சேவைகளும்; கொள்கை, சட்டம், ஒழுங்குமுறைகள் மூலமாக முறையாகச் செயல்படுத்தப் படுவதைக் கண்காணிப்பது மலேசியப் பிரதமர் துறையின் நோக்கம் ஆகும். பொதுஇந்தத் துறைக்கு மலேசியப் பிரதமர் தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாகப் பிரதமர் துறை அமைச்சர்கள் உள்ளனர். மலேசியப் பிரதமர் துறையில்; மலேசியப் பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office), மலேசிய துணைப் பிரதமர் அலுவலகம் (Deputy Prime Minister's Office) மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிற அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மலேசியப் பிரதமர் துறை ஜூலை 1957-இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பெர்டானா புத்ரா (Perdana Putra), புத்ராஜெயாவில் (Putrajaya) உள்ளது.[1] கட்டமைப்புமலேசியப் பிரதமர் துறை, பிரதமர் துறையின் பொது நிர்வாகம் (General Administration) என முன்பு அழைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia