மலேசிய சுகாதார அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு என்பது மலேசியாவில் மக்களின் உடல்நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாங்க அமைச்சு ஆகும். இந்த அமைச்சு பொது சுகாதாரம் உட்பட அனைத்து வகை பொதுநலம் தொடர்பான துறைகளைக் கண்காணிக்கின்றது.
அவற்றுள் முக்கியமாக மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கூடங்கள், மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், பல் மருத்துவம், உணவுச் சுகாதாரம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இதன் தலைமையகம் புத்ராஜெயாவில் உள்ளது.
அமைப்பு
சுகாதார அமைச்சர்
துணை அமைச்சர்
பொது செயலாளர்
சுகாதார தலைமை இயக்குநர்
ஜொகூர் மாநில சுகாதாரத் துறை
கெடா மாநில சுகாதாரத் துறை
கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறை
லபுவான் சுகாதாரத் துறை
மலாக்கா மாநில சுகாதாரத் துறை
நெகரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை
பகாங் மாநில சுகாதாரத் துறை
பினாங்கு மாநில சுகாதாரத் துறை
பேராக் மாநில சுகாதாரத் துறை
பெர்லிஸ் மாநில சுகாதாரத் துறை
சபா மாநில சுகாதாரத் துறை
சரவாக் மாநில சுகாதாரத் துறை
சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை
அமைச்சர்களின் பட்டியல்
சுகாதார அமைச்சர்கள்
சுகாதார அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.