மலேசிய வெளியுறவு அமைச்சர்
மலேசிய வெளியுறவு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Foreign Affairs of Malaysia; மலாய்: Menteri Luar Negeri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். மலேசியாவின் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Affairs); மலேசியர்களின் புலம்பெயர்வு (Malaysian Diaspora); மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் (Foreigners in Malaysia); பண்ணுறவாண்மை (Diplomacy) ஆகிய விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை நிர்வகிக்கும் பதவியில் உள்ளார்.[1] பொதுமலேசியாவின் வெளியுறவு அமைச்சின் தலைமை அமைச்சகம், விசுமா புத்ரா (Wisma Putra) என்று அழைக்கப்படுகிறது. ஆயினும், விசுமா புத்ரா என்பது புத்ராஜெயாவில் உள்ள மலேசியாவின் வெளியுறவு அமைச்சின் தலைமையகக் கட்டடத்தின் பெயர் ஆகும். மலேசியா, 1960-ஆம் ஆண்டுகளில், இலண்டன், நியூயார்க் மாநகரங்களில் தூதரகங்களைக் கொண்டிருந்தது. மற்றும் வாஷிங்டன், கான்பெரா, புது டெல்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய மாநகரங்களில் அதற்குத் தூதரக அலுவலகங்கள் இருந்தன. 1963-ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் மலேசியாவிற்கு 14 தூதரகங்கள் இருந்தன. அதே வேளையில் மலேசியாவில் இருபத்தைந்து வெளிநாடுகள் தம் தூதரகங்களைக் கொண்டு இருந்தன. 1965-ஆம் ஆண்டில், மலேசியாவின் தூதர்வழித் தொடர்புகள் பெரிய மறுசீரமைப்பைப் பெற்றன. 1966-இல், மலேசிய வெளி உறவுகள் அமைச்சு (Ministry of External Affairs) என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களின் பட்டியல்வெளியுறவு அமைச்சர்கள்வெளியுறவு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர். அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
வெளியுறவுத் துறைவெளியுறவுத் துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர். அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான்[2]
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia