மலேசிய இலக்கவியல் அமைச்சர்
மலேசிய இலக்கவியல் அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Digital of Malaysia; மலாய்: Menteri Digital Malaysia) என்பவர் மலேசிய இலக்கவியல் அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார். முன்பு இந்த அமைச்சு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அவரின் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையை அமைத்தபோது மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் பெயரில் ஓர் அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அன்வார் இப்ராகிம் இரண்டாம் அமைச்சரவை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 12 டிசம்பர் 2023-இல், இலக்கவிவல் துறைக்கு மலேசிய இலக்கவியல் அமைச்சு என ஒரு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. அமைப்பு
இலக்கவியல் அமைச்சர்களின் பட்டியல்இலக்கவியல் அமைச்சராகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.[1] அரசியல் கட்சிகள்:
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia