ரிப்பன் கட்டடம்
ரிப்பன் கட்டடம் (Ripon Building) தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வரலாறுஇந்தோ சரசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டடத்துக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.[1] வெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டடம் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரால் இந்திய ரூபாய் 750,000 செலவில் இது கட்டப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர் ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டடத்துக்கு ரிப்பன் கட்டடம் எனப் பெயரிடப்பட்டது. 1909, டிசம்பர் 12 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia